கண்ணாடி பாவனையால் வரும் புள்ளிகளை தடம் தெரியாமலாக்கணுமா? அப்போ இத செய்து பாருங்க
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி பயன்படுத்துகிறார்கள்.
நீண்ட நேரம் கண்ணாடிகளை தொடர்ந்து அணிவதால் மூக்கில் மேல் கருமையான கோடுகள் மற்றும் புள்ளிகள் போன்ற தழும்புகள் உருவாகும்.
சிலர் கண்ணாடி போடும் போது கண் பேட்ச் அணிவார்கள். இது மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நீக்கும்.
இவற்றை தாண்டி வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு இந்த தழும்புகள் மற்றும் கோடுகளை இல்லாமல் ஆக்கலாம்.
அந்த வகையில் வீட்டு வைத்தியம் முறையில் எப்படி கண்ணாடி தழும்புகளை நீக்குவது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கண்ணாடி தழும்புக்களை மறைக்க சில டிப்ஸ்
1. எப்போதும் கண்ணாடி அணிபவர்களுக்கு கரும் புள்ளிகள் இருக்கும். இதனை தடுக்க நினைப்பவர்கள் கண்களுக்கு பகல் நேரங்களில் கண்ணாடி போடாமல் ஓய்வு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு உங்கள் முகத்தை இரண்டு தடவைகள் சுத்தம் செய்ய வேண்டும். இது முகத்தில் ஏற்படும் புள்ளிகளிலிருந்து முகத்தை பாதுகாக்கிறது.
2. தழும்புகள் சுல அழுகிய திசுக்களால் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினையுள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு முன்னர் வழக்கமான Moisturizer பயன்படுத்துவது சிறந்தது. இது முகத்தில் ஈரப்பதனை உருவாக்கி கரும்புள்ளிகள் மற்றும் கோடுகள் வரவிடாமல் தடுக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் தடவ வேண்டும்.
3. மூக்கில் தழும்புகள் உருவாகி விட்டது என்றால் அந்த இடத்தை ப்ளீச் செய்வதால் சிறந்த தீர்வை பெறலாம். தக்காளி அல்லது உருளைக்கிழங்கை மூக்கில் தேய்த்தால் இயற்கையாகவே தழும்புகள் நீங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். தொடர்ந்து செய்து வர வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |