திருமணமான 4 மாதத்தில் காதல் கணவர் உயிரிழப்பு... சிறிது நேரத்தில் மனைவி எடுத்த அதிரடி முடிவு
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் விபத்தில் பலியானதால் மனமுடைந்த மனைவி மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரளா. நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்பு அவரது உடலை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரமேஷுடன் சென்ற அவரது நண்பர்கள் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கணவர் இறந்த தகவலைக் கேட்டு கதறியபடி மருத்துவமனைக்கு வந்துள்ளார் சரளா. உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ள நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். கணவரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அதே மருத்துவமனையின் கழிவறையில் தனது துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் உறவினர்கள் இடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில், இருவரது உடல்களை தனது சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.