இது என்ன ஓவிய காதலா? ஓவியத்திற்கு பூங்கொத்து கொடுத்து ப்ரபோஸ் செய்யும் நபர்!
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் ஒன்று அசைந்து அடுத்த ஓவியத்திற்கு ப்ரபோஸ் பண்ணும் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓவியம் நகரும் வீடியோக்காட்சி
பொதுவாக இணையத்தில் நம்மை வியக்கும் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
மேலும் இவ்வாறு பகிரப்படும் வீடியோக்காட்சிகள் அதிகமான பார்வையாளர்களின் கவனத்திற்கு செல்வதால் அவர்களின் ஆர்வம் அதிகமாகி நாளுக்கு நாள் வித்தியாசமான வீடியோக்கள் பகிரப்படுகிறது.
அந்த வகையில் கண்காட்சியில் ஒரு ஆணின் ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. அப்போது பார்வையாளர்கள் பார்த்து கொண்டு சென்ற பின்னர் அந்த ஓவியம் தன்னுடைய இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்கிறது.
அந்த ஓவியம் பக்கத்திலுள்ள பெண்ணின் ஓவியத்திற்கு சென்று பூங்கொத்துடன் தன் காதலை வெளிப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவுடன் அப்படியே சிலையாக நிற்கிறது.
இந்த காட்சி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ என்னடா இது ஓவியமா? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Museums can sometimes be extraordinarily fun pic.twitter.com/vbTEfkJcPp
— Gabriele Corno (@Gabriele_Corno) April 24, 2023