இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் காதல்தான் முக்கியமாம்!
இந்த உலகில் எத்தனையோ உறவுகள் வந்துபோகும். அதில் மிகவும் வித்தியாசமான மற்றும் புதுவித உணர்வையும் கொடுக்கக் கூடியது எதுவென்றால் அது காதல் தான்.
தனக்கு துணைக்கு எது தேவையோ, எந்தெந்த சந்தர்ப்பங்களில் தோள் கொடுக்க வேண்டுமோ அதை கேட்காமலே செய்துகொடுக்க வேண்டும் அதுவே சரியான புரிந்துணர்வு.
காதலிக்கும் போது உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன், யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பேன் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் அதெல்லாம் எந்தளவுக்கு உண்மையானது என்று கூறமுடியாது.
ஆனால், இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அனைத்தையும் விட அவர்களின் காதல்தான் முக்கியமாம். அது என்னென்ன ராசி என்று பார்ப்போம்...
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தங்கள் துணையுடன் செலவழிக்க விரும்புவார்கள். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையை தனிமையிலோ அல்லது யாரது அன்பும் கிடைக்கவில்லை என்றொரு உணர்வையோ கொடுக்க மாட்டார்கள். தங்கள் துணையுடன் இணைந்திருப்பதையே விரும்புவார்கள்.
கடகம்
தங்கள் துணையுடன் நேரத்தை செலவழிப்பதற்காக எந்த வேலையையும் புறக்கணித்துவிடுவார்கள். உறவுகளை மதிக்கக்கூடியவர்கள். தங்கள் உறவை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முயற்சிப்பார்கள். துணைக்கான முக்கியத்துவத்தை கொடுக்க என்றும் பின்வாங்கியதில்லை.
மகரம்
ஒருவரின் தூய்மையான அன்பை பெற்று விட்டார்கள் என்றால், அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவதை தவற மாட்டார்கள். தங்கள் துணைக்காக வீட்டு வேலைகளில் உதவுதல், அவர்களின் பணி இலக்குகளில் உதவுதல் போன்றவற்றின் மூலம் தங்கள் அன்பையும் இரக்கத்தையும் காட்ட முயற்சிப்பார்கள். உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
மீனம்
எவ்வளவு குழப்பங்கள் வந்தாலும் தங்கள் துணைக்காக நிற்பார்கள். துணைக்கு எப்பொழுதுமே சிறந்ததொரு சூழலை உருவாக்குவார்கள். தனது துணைக்காக அதிக நேரத்தை செலவிடுவார்கள்.