கழட்டிவிட்ட காதலி: 7 லட்சம் செலவழித்த காதலன்! பெற்றோருக்கு எழுதிய கடிதம் வைரல்
காதல் தோல்வி அடைந்த இளைஞர் ஒருவர் , காதலிக்கு ஏழரை லட்சம் செலவு செய்ததாகவும், அந்த பணத்தை நட்ட ஈடாகக் கேட்டு அவரது தந்தைக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காலத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது நேரத்தினை சமூக வலைத்தளங்களில் தான் அதிகமாக செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் காதல் தோல்வியடைந்த இளைஞரின் கடிதம் ஒன்று ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கும் தொலைந்த சான்றிதழை பெறுவதற்கு பல்வேறு குழந்தைகளின் கல்வி உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயனுள்ள முறையை ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட இணையதள நிறுவனங்கள் பயன்படுகிறது.
இந்நிலையில் முகவரி அறியப்படாத காதலர் ஒருவர் ஐந்து வருடங்களாக காதலித்த காதலியை கழட்டி விட்டதால், காதலியின் தந்தைக்கு நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூகவலைத்தளங்களில் ரைவலாகி வருகின்றது.