குழந்தைகளின் மூளையை பாதிக்கும் ஸ்மார்ட் போன்! பெற்றோர்களே உஷார்
இன்றைய காலத்தில் மொபைல் மற்றும் கணினிகளில் வேலை செய்பவர்களுக்கு கண் பாதிப்பதுடன், ஸ்மார்ட் போன் பாவிக்கும் குழந்தைகளுக்கு மூளை பாதிக்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.
இன்று கணினி, மொபைல் பயன்பாடு அதிகமாக இருப்பதால் கண் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிலும் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாற்றம் மட்டுமின்றி உணவுப் பழக்கத்திலும் அதிகமான மாற்றம் ஏற்பட்டு பல வியாதிகளில் சிக்கித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று மொபைல் போன்களுக்கு அடிமையாவதால் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகின்ற நிலையில், எவ்வாறு பராமரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கண்களை எவ்வாறு பாதுகாப்பது?
குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மொபைல் போன் கொடுக்காமல் வெளியே சென்று விளையாட பழக்க வேண்டும்.
கணினியில் தவிர்க்க முடியாமல் 8 அல்லது 10 மணி நேரம் வேலை செய்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குறைந்தது 2 நிமிடம் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க வேண்டும்.
ஏனெனில் பக்கத்து பார்வையை அவதானித்துக் கொண்டு இருப்பதுடன், அவ்வப்போது தூர பார்வையிலும் கண்களை ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தூரத்து பார்வை தெரியாமலும், கண்களில் ஈரப்பதம் குறைந்து கழுத்து மற்றும் தலைவலி ஏற்படும்.
கணினித் திரையை முகத்திற்கு நேராகப் படும்படி வைக்காமல் கொஞ்சமாக வேறு திசையில் திருப்பி வைத்துப்பார்க்க வேண்டும்.
அவ்வப்போது குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவுவதுடன், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
குழந்தைகளின் மூளை பாதிக்கும் மொபைல்
பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரையிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.
2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம்.
அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம்.
இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |