மனித குலம் தோன்றிய குமரிக்கண்டம் அழிந்தது எப்படி? சுவாரஷ்ய கதை
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக்கண்டம் எப்படி பூமியில் இருந்து அழிக்கப்பட்டது என்பதை சுவாரஷ்யமாக பார்க்கலாம்.
குமரிக்கண்டம்
இந்த பூமியில் அதிகளவு ரகசியங்களும் மர்மங்களும் நிறைந்த இடம் என்றால் அது இந்தியா தான். உலகத்தின் தொடக்கமே இங்கே இருந்து தான் ஆரம்பமாகியது எனவும் பூமியின் பூர்வீக குடிகள் இங்கே தான் வாழ்ந்தார்கள் எனவும் வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இப்படி இருக்க அதிசயம் மர்மம் என்ற இரண்டு பாகங்கள் கலந்து வருவது தான் இந்த குமரிக்கண்டம். குமரிக்கண்டம் என கூறினால் தற்போது இருக்கும் தமிழ்நாடு தான் என நினைக்க வேண்டாம்.
இன்றிலிருந்து இருபதாயிரம் வருடங்களுக்கு முன்னர் குமரிக்கண்டம் என அழைக்கப்பட்ட இடம் இந்தியாவுடன் இணைந்து பெரிய இடமாக இருந்த ஒரு கண்டமாகும். இங்கே தான் மனித குலத்தின் முதல் உயிர் தோன்றியதாக கூறப்படுகின்றது.
தமிழ்நாட்டில் தொடங்கி கிழக்கில் அவுஸ்திரேலியா மேற்கில் அந்தமான், இலங்கை, மாலைதீவு, மடகஸ்கர் வரைக்கும் இருக்கும் நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் தீபகர்ப்ப நாடு தான் குமரிக்கண்டம்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தாக சொல்லப்படும் இந்த குமரிக்கண்டம் மிகவும் பரபரப்பா இயங்கிக்கொண்டிருந்த கண்டம் என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் நிலவிக்கொண்டிருக்கிறது.
குமரிக்கண்டம் பற்றிய ஆதாரங்கள் அறிவியல் ரீதியாக இல்லாமல் சங்க இலக்கியங்களில் மட்டும் இருப்பதால் சிலர் இதை நம்ப மறுக்கிறார்கள். தொல்பொருள் ரீதியாக குமரிக்கண்டம் இல்லை என சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை.
அதானால் குமரிக்கண்டம் இருந்தது உண்மை என பலரும் நம்புகிறார்கள். குமரிக்கண்டம் உண்மையில் இருந்ததா இல்லை வெறும் கட்டுக்கதையா என்பதை பார்க்கலாம்.
மொரிசியஸ் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய பெருங்கடலிற்குள் புதைந்திருக்கும் ஒரு பெருங்கண்டத்திற்கு மொரிஷ்யா என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
இது 2013 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டம் தான் லெமோரியா கண்டம் எனும் குமரிக்கண்டம் என பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. மனித குலத்தின் வரலாறு தொடங்குவதற்கு முன்னரே இந்த நிலப்பரப்பு கடலுக்கு அடியில் மூழ்கி விட்டது.
இந்த குமரிக்கண்டம் எப்படி இருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களில் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கூகுளில் லெமோரியா என தேட ஆரம்பித்தால் பல முரண்பாடான தகவல்கள் மட்டுமே கிடைக்கிறது.
பூமியில் இந்த குமரிக்கண்டம் அழிய காரணம் பூமியின் தட்டு விலகல் தான் என கூறப்படுகின்றது. இமய மலையின் உயரம் வருடத்திற்கு வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டும்.
எவரஸ்ட் சிகரத்தில் உயரத்தின் அதிகரிப்பு காட்ட வாய்ப்பு இல்லை. காரணம் புவி வெப்ப காரணமாக பனி உருகுகிறது அதனால் நகர்வினால் நகர்த்தப்படும் உயர்வு கணிக்க முடியாததாக இருக்கும்.
இமயமலைக்கு அடிப்பகுதியில் இரண்டு தட்டுக்கள் பொருந்தி இருக்கிறது என நினைத்து பாருங்கள். இந்த இரண்டு தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி உருவாகியது தான இமயமலை.
இமயமலை பாறைகளில் இருக்கும் படிவங்களில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனாமி உருவாகிய காரணம் கூட இரண்டு தட்டுக்களின் மோதல் காரணமாக தான்.
இங்கு காட்டிய படத்தில் பாருங்கள் குமரிக்கண்டம் இருந்ததாக கூறப்படும் இடத்தில் நான்கு புவி தட்டக்களின் இணைப்பு காணப்படுகின்றது.
அப்படி பார்த்தால் இந்த நான்கு தட்டுக்களிலும் எதிரெதிர் ஏற்பட்ட அசைவு தான் குமரிக்கண்டம் பிளவுபட்டு நீரில் மூழ்கி போக காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இங்கு இன்னுமொரு விடயம் கவனிக்க வேண்டும். அதாவது இந்த தட்டுக்கள் விலகிருக்கிறது என்பதை விட நான்கும் மோதி கடலிற்குள் குவிந்திருக்கிறது என்பது தான் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.
இலங்கை மடகஸ்கர் போன்ற நாடுகள் உண்மையிலேயே குமரிக்கண்டத்தை சேர்ந்த நடுகள் தான். இந்த நாடுகள் குமரிக்கண்டத்தின் எல்லை பகுதியில் காணப்பட்ட மலைபிரதேச நாடுகள்.
அதனால் தான் லெமோரியா மூழ்கிய போதும் இந்த நாடுகள் தப்பி பிழைத்திருக்கு. இதை இந்த புவித்தட்டுக்கள் உள்நோக்கி குவிந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்திருக்கும் என்பதற்கு புவியியல் ரீதியாக எந்த சான்றும் இல்லை. இப்போது தான் முக்கியமா இங்கே இருந்த மனித சமுதாயம் எங்கே என்ற பெரிய கேள்வி உருவாகும்.
மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயிருக்கு என்பதை பரிணாம கொள்கையின் தந்தை சார்லஸ் டார்வினால் ஏற்றுக்கொள்ளபட்ட கருத்தாக உள்ளது. அந்த மனித குலம் 9 அடி மனிதர்கள் என கூறப்படுகின்றது. இதற்கு அறிவியல் ரீதியாக பல சான்றுகள் உள்ளன.
இந்த குமரிக்கண்டத்தில் 49 நாடுகள் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று காலத்தில் நாடு என்கிற சொல் ஊர் என்பதற்கு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சில ஊர்கள் சேர்ந்து தான் நாடுகளாக இருந்திருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
உலகத்தில் இருக்கும் பல நாடுகளை போல இந்தியாவில் இருக்கும் கடலோர பகுதிகள் கடலரிப்பு காரணமாக கடலிற்குள் மூழ்கியதற்கு முக்கிய சான்றுகள் நிறைய கிடைத்துள்ளது.
ஆனால் கண்டம் என்பதற்கு இணங்க ஒரு பெரும்பகுதி கடலில் மூழ்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இனிமேல் அப்படி கடலிற்கு அடியில் நிலப்பரப்பு இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கபட்டாலும் அது கடலுக்கடியில் மூழ்கி இருகக வாய்ப்பில்லை. அது பல ஆண்டுகள் பழமைபட்டதாக தான் இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
