விளம்பரம் செய்து சிக்கலில் சிக்கிக் கொண்ட லாஸ்லியா உட்பட இருவர்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
அரசாங்கம் தடை விதித்த விளையாட்டை சில பிரபலங்கள் விளம்பரம் சிக்கலில் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
தடை செய்யப்பட்ட விளையாட்டு
அண்மையில் அரசாங்கம் தடை விதித்திருந்த ஒன்லைன் விளையாட்டான ரம்மி, பலரது வாழ்க்கையை காவு வாங்கியுள்ளது.
இந்த விளையாட்டிற்கு அடிமையான சிலர் தங்களது பணத்தையும் இழந்து உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்தே ஆகவேண்டும் என வற்புறுத்தி வந்தார்கள்.
ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமான சில பிரபலங்கள் இந்த ஒன்லைன் விளையாட்டுக்களை விளம்பரம் செய்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கிவிட்டார்கள்.
இத்தடையை மீறி விளையாடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.
விளம்பரம் செய்த பிரபலங்கள்
இந்த விளையாட்டை விளையாட ஊக்குவிப்பவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டணையும் 5 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விளையாட்டுக்களை பிரபலப்படுத்திய டிக்டாக்கில் பிரபலமான அமலா சாஜியும், பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் சிவானி என பலர் குறித்த விளையாட்டை விளம்பரப்படுத்தி போஸ்ட்டுக்களை போட்டிருக்கிறார்கள்.
இது தற்போது அதிக சர்ச்சையான விடயமாக பரவி வருகிறது. மேலும் இது பற்றி வீடியோ ஒன்றை வழக்கறிஞர் விக்னேஷ் முத்துக்குமார் வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இவர்கள் விளம்பரப்படுத்தும் செயலியானது அரசாங்கம் தடை செய்திருந்தது. அப்படி இருந்தும் சில ஒன்லைன் விளையாட்டுக்கள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்களில் சில பிரபலங்கள் தடை செய்த விளையாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்தும் இவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இது பற்றி விளம்பரப்படுத்தும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.