முன்னாள் காதலன் கவின் திருமணம்! முதன்முறையாக மனம்திறந்த லாஸ்லியா
முன்னாள் காதலர் கவின் திருமணம் குறித்து தற்போது லாஸ்லியா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை லாஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.
பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
கவின் திருமணம்
கவின் திருமணம் குறித்து லாஸ்லியா மனம்திறந்து முதன்முறையாக பேசியுள்ளார். கவின் திருமணம் செய்து கொண்டதையறிந்து சந்தோஷப்படுவதாகவும், வேலையிலும் நன்றாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றது. அவருக்காக மகிழ்ச்சியடைவதாக லாஸ்லியா பேசியுள்ளதுடன், தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், நிச்சயம் காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
தந்தை குறித்து பேசுகையில், அவர் இறந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும், பிக்பாஸ் குறித்து எதுவும் அவருக்கு தெரியாது. தொகுத்து வழங்க செல்வதாக நினைத்தார். பின்பு பிக் பாஸ் குறித்தும், மீடியா குறித்தும் தெரிந்த பின்பு தனக்கு சப்போர்ட் செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |