ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கா? 24 மணிநேரம் ஊறவைத்து இதை மட்டும் சாப்பிடுங்க
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி முழுபலனை பெறலாம்.
ஹீமோகுளோபின்
ஹீமோகுளோபின் என்பது ரத்த சிகப்பணுக்களில் காணப்படும் ஒருவகையான புரதமாகும். ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பதுடன், நுரையீரிலிலிருந்து மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது இதன் முக்கிய வேலையாகும்.
இதன் அளவு குறைவாக இருந்தால் போதுமான ஆக்ஸிஜன் எடுத்துச் செல்வது சிரமமாகவும் இருக்கும். இதனால் ரத்த சோகை ஏற்படலாம்.
உடம்பில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்- 3
பேரிச்சை- 50 கிராம்
கருப்பு காய்ந்த திராட்சை- 50 கிராம்
அத்திப்பழம்- 50 கிராம்
பாதாம்- 50 கிராம்
பட்டை துண்டு- ஒரு துண்டு
இஞ்சி- 2 துண்டு துருவியது
ஆப்ரிகாட்- 50 கிராம்
செய்முறை:
காற்று புகாத கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றிக் கொள்ளவும்.
பின்பு 24 மணிநேரம் ஊற வைத்து, இந்த கலவையை தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து 3 மாத காலத்திற்கு சாப்பிடவும். சில தினங்களிலேயே உங்களது ஹீமோகுளோபின் மாற்றத்தை நீங்கள் நிச்சயம் தெரியமுடியும்.
மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் சிரப்பினை எடுத்துக்கொண்டு சிரமப்படாமல் வீட்டிலேயே ஆரோக்கியமாக இவ்வாறு செய்து சாப்பிட்டால் 3 மாதத்திற்குள் நல்ல பலனை கண்கூடாக அவதானிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |