புடவையில் கொள்ளை அழகில் ஜொலிக்கும் லொஸ்லியா! ட்ரெண்டிங் புகைப்படம் இதோ
நடிகை லொஸ்லியா புடவையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது.
பிக்பாஸ் லொஸ்லியா
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா, 2019ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.
இந்த சீசனில் இரண்டாவது ரன்னராக வந்த இவர், தற்போது நடிப்பில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.
திரைப்படத்தில் அறிமுகம்
பிக்பாஸிற்கு பின்பு 2021ம் ஆண்டு ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ் மற்றும் KPY பாலா ஆகியோருடன் அறிமுகமானார். இது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.
பின்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றியாளரான ஆரியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது மலையாளத் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ver 5.25 இன் அதிகாரப்பூர்வ ரீமேக்கான கூகுள் குட்டப்பாவில் தர்ஷன், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோருடன் லொஸ்லியா நடித்து வருகின்றார்.
இந்நிலையில் லொஸ்லியாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தில் லொஸ்லியா புடவை அணிந்து கொள்ளை அழகில் ஜொலிக்கின்றார்.
பாலாவைக் கடித்த பெண் போட்டியாளர்