அல்டிமேட்டில் ஏற்பட்ட மோதல்! பாலாவைக் கடித்த பெண் போட்டியாளர்: பரபரப்பான ப்ரொமோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் கோழி டாஸ்கில் பயங்கர சண்டைகள் அரங்கேறி வருகின்றது.
தாமரையுடன் மோதிய ரம்யா
பிக்பாஸ் அல்டிமேட்டில் கடந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றவர் தான் ரம்யா. ஏற்கனவே பிக்பாஸ் சீசனில் விளையாடி விஷப்பாட்டில் என்ற பட்டப்பெயரை ரசிகர்களிடம் பெற்றவர்.
தற்போது தன்னுடைய விஷத்தனமான விளையாட்டினை ஆரம்பித்துள்ளார். ஆனால் இவர் ஆரம்பித்த இந்த விளையாட்டு தாமரையிடம் பலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தாமரை சரமாரியாக ரம்யாவை எதிர்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டு வாயடைக்க வைத்துள்ளார்.
பாலாவை கடித்த ரம்யா
பரபரப்பாக விளையாடிக்கொண்டிருந்த இந்த டாஸ்கில் முட்டையை எடுத்துக்கொண்டு நகர்ந்த ரம்யாவை பாலா பின்னே இருந்து பிடிக்க ஒரு கட்டத்தில் ரம்யா தப்பிப்பதற்கு வழி இல்லாமல் பாலாவைக் கடித்துள்ளார்.
ஆனால் தான் பாலாவைக் கடித்ததற்கு விளக்கத்தை கொடுத்த நிலையில், ஒட்டுமொத்த போட்டியாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஒன்றரை வயது குழந்தை படைத்த உலக சாதனை