மாடர்ன் உடையில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துபோன ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
சமீபத்தில் கூட லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளியில் பங்குபெற்ற அஸ்வின் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.
இதையடுத்து, லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்ட லாஸ்லியாவின் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.....