நோய் எதும் வந்துருச்சா? லாஸ்லியா வீடியோவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமான லாஸ்லியா மரியநேசனின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ”ஒல்லியாகி இப்போ நீங்க நல்லாவே இல்ல” என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன், குடும்ப சூழலின் காரணமாக 18 வயதிலேயே செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
அங்கிருந்து புகழ்பெற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு உலக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார்.
பிக்பாஸில் கவினுடன் காதல் கிசுகிசுக்கள் எழ, வெளியில் வந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன.
தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் வர ப்ரென்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார், தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
பிக்பாஸில் கலந்துகொண்ட போது கொழு கொழு நாயகியாக இருந்த லாஸ்லியா, தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி விட்டார்.
அத்துடன் மாடர்ன் உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதைப் பார்த்த ரசிகர்களோ, பிக்பாஸ்ல இருக்கும் போது உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனா இப்போ கம்மி ஆயிடுச்சு.
நீங்கள் குண்டாக இருக்கும் போதுதான் அழகாக இருந்தீங்க; இப்போ எடை குறைஞ்சிட்டு நல்லாவே இல்ல.
உங்களுக்கு எதும் நோய் வந்துருச்சா? என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.