உனக்கு போட்டோ ஷூட் கேக்குதா... பயங்கரமாக திட்டிய ரசிகருக்கு லொஸ்லியா கொடுத்த பதிலடி
பிக்பாஸ் லொஸ்லியாவின் புதிய மாடர்ன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா படவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.
தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா படு மாடர்னான பச்சை நிற கவுன் ஒன்றில், காலில் மிக உயரமான ஹீல்ஸ் செருப்பை அணிந்து கொண்டு சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை கண்ட ரசிகர் ஒருவர், அவன் அவன் கொரோனாவால் செத்துட்டு இருக்கான். உனக்கு போட்டோ ஷூட் கேக்குதா என்று திட்டி கமெண்டு செய்துள்ளார்.
அதற்கு லொஸ்லியா தயவுசெஞ்சு நீங்க இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதீங்க. அப்போதுதான் என்னுடைய போஸ்ட்டை நீங்க பாக்காமல் இருக்க முடியும் ப்ரதர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.