Hair growth: தலைமுடி நிறைய கொட்டுதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்- திரும்ப செய்யாதீங்க
தலைமுடி உதிர்தல்/ முடி கொட்டுதல் பிரச்சினை உலகத்திலுள்ள அதிகமான மக்களின் பிரச்சினையாக வளர்ந்துள்ளது.
தினமும் கொஞ்சம் முடிகள் தலையிலிருந்து கொட்டத்தான் செய்யும். இதை நாம் கவனிக்க மாட்டோம். கண்டுகொள்ளவும் மாட்டோம். ஆனால் சிலருக்கு தலை வாரும்போதெல்லாம் நிறைய முடி கொட்டும்.
இது காலப்போக்கில் ஒட்டுமொத்த முடியையும் இழக்க நேரிடுமோ என்ற கவலை உருவாகும். குறைவாக முடி கொட்டும் பொழுது கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். அதனால் அந்த பிரச்சினை பெரிதாக வெளியில் தெரியாது.
முடி கொட்டிய இடத்தில் புது முடிகள் முளைக்காத போது தான் தலைமுடி இழப்பு/ தலையில் முடி கொட்டுதல் பிரச்சினை ஏற்படுகிறது.
அந்த வகையில், தலைமுடி உதிர்வு பிரச்சினை ஏற்படுவதற்கு என்னென்ன காரணங்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள்
1. மரபுவழி/ பரம்பரைக் காரணங்களால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். ஆண்களுக்கு தலையின் முன்பக்கம், பின்பக்கம் பார்த்தது போன்று தலைமுடிச் செல்லும். இதனால் காலப்போக்கில் முன்னால் தலைமுடி இல்லாமல் போய் விடும். இது ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் இருக்கும்.
2. பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பகாலம், பிரசவகாலம், மாதவிடாய் காலம் உள்ளிட்ட காலங்களிலும், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போன்ற நோய்களாலும் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். இது தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இருக்கும்.
3. தலையில் ஏற்படும் தோல் நோய்கள் காரணமாக தலைமுடி உதிர்வு ஏற்படும். உடலில் வழக்கமாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தலைமுடி கொட்டலாம்.
4. புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு தலைமுடி முழுவதும் கொட்டி, மொட்டையாகி விடும். சிகிச்சை முடிந்த பின்னர் தலைமுடி வளர்ந்து விடும்.
5. உடலாலும், மனதாலும் ஏற்படும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம் கூட தலைமுடி உதிர்வுக்கு காரணமாகும். பிரச்சினை சரியான பின்னர் தலைமுடி மீண்டும் வளர ஆரம்பிக்கும்.
6. அதிக ஹேர் ஸ்டைல் பண்ணுபவர்களுக்கும், தலைமுடி கொட்டுவது வழக்கம். அதே சமயம், தலைக்கு புதிய புதிய எண்ணெய்கள், க்ரீம், பேஸ்ட், போன்ற ரசாயனப் பொருட்கள் கலவையை அடிக்கடி பயன்படுத்தினால் தலைமுடி உதிரும்.
7. அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கையாக இருந்தால் தலைமுடி அதிகமாக கொட்டும். பிள்ளைகளுக்கும் சில சமயங்களில் அதே ஸ்டைலில் தலைமுடி கொட்டும்.
8. வயது மூப்பு காரணமாகவும் தலைமுடி உதிரும். இயற்கையாகவே நடப்பதால் அதனை கட்டுக்குள் வைப்பது அவ்வளவு எளிதல்ல.
9. திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு. இப்படி ஏற்பட்டால் உரிய மருத்துவரை காண வேண்டும்.
10. சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும். எனவே அது குறித்து கவலையடைய வேண்டாம்.
11. அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொண்டு போகும். முடிந்தவரை உங்களுக்குள் இருக்கும் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
12. போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும். எனவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகள், காய்கறிகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |