கஷ்டப்படவே வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்தது எப்படி?
இன்று பலரும் போராடும் விடயங்களில் ஒன்று எடை குறைப்பு, எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக டயட், உடற்பயிற்சி, மருந்துகள் எடுத்துக்கொள்வது என பலவிதமான வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய வாழ்க்கைமுறையில் 7 விதமான மாற்றங்களை செய்து 45 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
இதுபற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்,
அமெரிக்காவை சேர்ந்தவர் Newman, கணவருடன் சேர்ந்து தொழில் தொடங்கியதும் மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது, ஆரோக்கியமற்ற உணவுகள் என இவரது எடை 112 கிலோ வரை அதிகரித்தது.
இதனால் பலவித உடல்நலத் தொந்தரவுகளும் வந்துவிட்டது, எனவே 2021ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் உடல் எடையை குறைப்பது என முடிவு செய்தார், அதுவும் ஆரோக்கியமான முறையில்.
தண்ணீர் அருந்துதல்
சோடா அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, அதிகளவில் தண்ணீர் அருந்த தொடங்கியுள்ளார். பொதுவாகவே ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது பலவித நோய்களிலிருந்து நம் உடலை காக்கும்.
துரித உணவுகளுக்கு குட்பை
உடல் எடையை குறைப்பது என முடிவு செய்துவிட்டால் முதலில் நாம் துரித உணவுகளை நினைத்துக்கூட பார்க்ககூடாது, ஏனெனில் உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி கொழுப்புகள் உடலில் தங்கி பலவித தொந்தரவுகளையும் கொடுக்கும்.
பசிக்கும் நேரத்தில் ஆரோக்கியமான, சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
நடைப்பயிற்சி
ஒவ்வொருநாளும் நடப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளார் Newman, அவரது மகள் தடகள வீரர், லேசான காயங்களுடன் அவதிப்பட்டு வந்த நிலையில் குணமடைவதற்காக YMCAவில் பதிவு செய்ய வேண்டிய சூழல் இருந்துள்ளது, அத்துடன் இவரும் உறுப்பினராக இணைந்து கொள்ள நடைப்பயிற்சியை தொடங்கியுள்ளார்..
Shutterstock
சத்தான உணவுகள்
மற்றொரு முக்கியமான விடயம், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது, ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே நமக்கு தேவையான சத்துக்களை வழங்கும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சரிவிகித உணவுகளை உட்கொள்வது அவசியம்.
இதற்காக App ஒன்றை பயன்படுத்தி வந்த Newman, தினமும் சாப்பிடுவதை உற்றுநோக்கி வந்துள்ளார், பொரித்த உணவுகளுக்கு நோ சொல்லிவிட்டு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
இயற்கையை ரசியுங்கள்
கணவருடன் சேர்ந்து இயற்கையை ரசிப்பது என்றால் Newmanக்கு அலாதி பிரியமாம், இதனால் மனதும் லேசாவதுடன் பிரச்சனைகளை பற்றி யோசிக்காமல் புத்துணர்ச்சி பெறலாம் என்பது Newmanனின் நம்பிக்கை.
மதுபானங்களுக்கு குட்பை
தினமும் குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் உறக்கம் அவசியம், ஆல்கஹாலுக்கு நோ சொல்லிவிட்டு 10 மணிக்கு உறங்க சென்று விடுவாராம் Newman.
கடைசியானது, ஆனால் முக்கியமானது
உடல்எடையை குறைப்பது என முடிவெடுத்து விட்டு அதை சரியாக கடைசி வரை கடைப்பிடிப்பது முக்கியமானது, தொடக்கத்தில் சில நாட்கள் சிரமமாக இருந்தாலும் உடலுக்கு எது முக்கியமோ அதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும், விடுமுறையாக வெளியிடங்களுக்கு சென்றாலும் Newman தன்னுடைய கட்டுப்பாடுகளில் கவனமாக இருப்பாராம், இதனால் இரண்டு மாதங்களில் 45 கிலோ வரை எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வதாக மகிழ்கிறார் Newman.
iStock; Canva