மேடையில் சுருண்டு விழுந்த சிவன்..அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி! இதயத்தை உறைய வைக்கும் காட்சி
வாழ்வில் மரணம் எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
நிலையற்ற வாழ்க்கைக்கு சாட்சி சொல்லும் சம்பவங்களை நாம் நிறையவே பார்த்திருப்போம்.
அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் பலரையும் கண் கலங்க செய்திருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம், ஜான்பூரில் புகழ்பெற்ற ராம் லீலா நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதில், உள்ளூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடமிட்டு நடித்திருக்கிறார்.
आरती के दौरान अचानक मंच पर गिर पड़ा शख्स | Unseen India pic.twitter.com/M8wdUhu1NF
— UnSeen India (@USIndia_) October 11, 2022
ஜான்பூரில் உள்ள பெலாசின் கிராமத்தில் நடைபெற்ற இந்த ராம் லீலா நாடகத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்துக்கொண்டிருந்த ராம் பிரசாத் திடீரென மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் மற்றும் சக நடிகர்கள் உடனடியாக அவரை எழுப்பியிருக்கின்றனர்.
ஆனால், அவரிடம் எவ்வித சலனமும் இல்லாததால் பதறிப்போன மக்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.