மீனத்தில் ராகு பெயர்ச்சி இந்த ராசியினர் ஜாக்கிரதை! யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இதற்கமைய நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படக் கூடிய ராகு மற்றும் கேது இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சனி பகவானுக்கு அடுத்ததாக அனைவரும் அச்சப்படும் கிரகங்களாக ராகு மற்றும் கேது காணப்படுகின்றது.
ராகு மற்றும் கேது இருவரும் கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று தங்களது ராசியை மாற்றினார்கள். ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு இடமாற்றம் அடைந்துள்ளார்.
இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
ராகு மற்றும் கேது உங்களுக்கு எதிர்பாராத சில திருப்பங்களை கொடுக்கப் போகின்றனர். உறவினர்களோடு பேசும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
திருமண வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
சிம்மம்
நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றவர்களோடு பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒப்பந்தங்களில் கையெழுத்து போடாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
மேஷம்
ராகுபகவான் உங்களுக்கு உடல் சம்பந்தப்பட்ட விடயங்களில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது விலகி இருப்பது நல்லது. திருமண காரியங்களில் சிறிது தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் குறித்து கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |