அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்? எச்சரிக்கையாக இருங்க
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். வீட்டில் மட்டுமின்றி அலுவலகத்திலும் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்கின்றனர்.
சுமார் 8 முதல் 9 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
உட்கார்ந்து வேலை செய்வதால் என்னென்ன உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
உட்கார்ந்து வேலை செய்தால் ஏற்படும் பிரச்சினை
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது. இதனால் இது கெட்ட கொழுப்பாக உடலில் சேர்ந்து உடல் எடையையும், பல நோய்களையும் வரவழைக்கின்றது.
அதிக நேரம் அமர்ந்து செய்பவர்கள் செரிமான பிரச்சினையை சந்திப்பதுடன், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினையையும் சந்திக்கின்றனர்.
தசைகள் பலவீனமடைவதுடன், முழங்கால் வலியும் அதிகரிக்கின்றது. மேலும் உடம்பில் ரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக உள்ளதால் கால்களில் கூச்சல் ஏற்படுகின்றது.
உடலின் செயல்பாடு குறைவாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து அடிக்கடி நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இவ்வாறனவர்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா இவற்றினை மேற்கொள்ளவும்.
கணினியில் திரையை தொடர்ந்து பார்த்து வேலை செய்வதால் இதிலிருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவித்து, கண்பார்வையை பலவீனப்படுத்துகின்றது.
இவ்வாறு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |