கூலி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்... ரஜினி இல்லையா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 39 ஆவது பிறந்தநாளை கூலி படக்குழுவினருடன் கொண்டாடிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். 2016ம் ஆண்டு அவியல் என்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதனை தொடர்ந்ர்து 2017 ஆம் ஆண்டே மாநகரம் என்ற படத்தை இயக்கி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார்.
அதனையடுத்து மாஸ்டர், விக்ரம், லியோ கைதி, என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
தற்சமயம் தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர்.
தற்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் கூலி அவரது ஆறாவது திரைப்படமாகும். நடிகர் ரஜினியை வைத்து கூலி என்ற மாஸ் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 39வது பிறந்தநாளை கூலி படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Lokesh Kanagaraj Birthday Celeb at #Coolie sets 💥🔥
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 14, 2025
pic.twitter.com/YavabfgJ2Q
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |