இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷை வரவேற்க திரண்ட ரசிகர் கூட்டம்: வைரல் காணொளி
நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு சென்றுள்ளதாக அண்மையில் அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது இலங்கையில் கீர்த்திக்கு கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பு காட்சியடங்கிய காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி
சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இலங்கை சென்றது படத்தில் நடிக்கவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ அல்ல. கொழும்பில் பிரபல ஆடையகம் ஒன்றின் கிளை நிலையத்தை திறந்து வைப்பதற்காகவே சென்றுள்ளார்.
குறித்த ஆடையகத்தின் திறப்பு விழாவுக்கு கீர்த்தி சுரேஷ் கிளாமரான உடையில் சென்றுள்ளார். அங்கு அவரை பார்க்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் திரண்டுள்ளது.
காரில் இருந்து இறங்கிய கீர்த்தி சுரேஷை அந்த கூட்டத்துக்கு நடுவில் அழைத்து செல்லவே பவுன்சர்கள் சிரமப்பட்டுள்ளனர்.
அந்தளவுக்கு கீர்த்தியின் ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். குறித்த காட்சிகள் அடங்கிய காணொளிகள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |