ஊரடங்கில் வெளியில் வந்த நபர்... விசாரித்த பொலிசாருக்கு கையில் கோழியுடன் அளித்த பதில்
கர்நாடகாவில் ஊரடங்கினை மீறி வெளியே வந்த நபரை பொலிசார் விசாரித்த போது அவர் கூறி பதில் இன்று பேச்சுப் பொருளாக உலா வந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டாயமாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பலரும் இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மீது பொலிசார் கடுமையான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில்ல் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த நபரிடம் காரணம் கேட்டபோது, தனது கோழிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவரிடம் கோழியை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கின் போது வெளியே வர மக்கள் பல காரணங்களை தெரிவித்து வருகின்றனர் எனவும் மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் பொலிசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
