யானைக்கே சாப்பாடு ஊட்டி விடும் சின்னகுழந்தை... பார்ப்பவர்களை கவரும் க்யூட் வீடியோ
பொதுவாகவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் அது ஒரு தனி சந்தோசம். எப்போதும் பார்த்தாலும் துறுதுறுவென எதாவது செய்துவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்குவதும் இவர்களின் வழக்கம் தான்.
அதிலும் பேசவே தெரியாமல் செல்ல மழலைக்குரலில் கொஞ்சலாக பேசுவதும் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் தோன்றும். அந்தவகையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே தினமும் எதாவது ஒரு சம்பவம் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வரும். அப்படி அனைவரையும் மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டும் வீடியோ தான் இது.
அந்த வீடியோவில் ஒரு குட்டிப்பெண் தன்னை விட மிகப்பெரிய யானைக்கு தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவில் பாதியைக் கொடுக்கிறது.
அதையும் அந்த யானை வாங்கி சாப்பிட்டு தும்பிக்கையை ஆட்டி ஆட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சியை பார்க்கும் போது இப்போது இருக்கும் குழந்தைகள் எல்லாம் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |