படுக்கையில் நெளியும் பாம்புகளுடன் குஷியாக தூங்கும் சிறுமி... புல்லரிக்கும் காட்சி
பாம்புகளுக்கு மத்தியில் குஷியாக தூங்கும் சிறுமியின் அசாத்திய தைரியத்தை பறைசாற்றும் காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் மனிதர்களுள் பெரும்பாலானவர்களுக்கு ஒரு இனம் புரியாம பயம் இருக்கும்.
அதற்கு மிக முக்கிய காரணம் பாம்புகளின் உடல் அமைப்பு மற்றும் உயிரை பறிக்கும் விஷத்தன்மை ஆகியவையே ஆகும்.
குறிப்பாக பாம்புகள் தொடர்பாக தொன்று தொட்டு புனையப்பட்டு வந்த கதைகளும் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சாதாரி பாம்புகள் தொடர்பான குறிப்புகளும் பாம்புகள் மீதான மனிதர்களின் பயத்தை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளது.
அதனால் தான் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி கூட தோற்றம் பெற்றது.
ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் சிறுமியொருவர் பொம்மையை கட்டியணைத்து தூங்குவது பாம்புகளை கட்டியணைத்து தூங்கும் புல்லரிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |