பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன டைனோசர் மீண்டும் காட்டுக்குள்...! உண்மை என்ன?
அழிந்துப்போன டைனோசர்களைப் போலவே தோற்றமளிக்கும் அரியவகை உயிரினம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் உலாவி வருகின்றது.
குட்டி டைனோசர்
பியூடெங்கேபிடென் என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோவொன்றில் குட்டி டைனோசர்கள் போல காட்சியளிக்கும் சில விலங்குகள், காட்டுக்குள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது உறுதியாகி இருந்தாலும், பறவை இனத்திற்கும் டைனோசர் இனத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குட்டி டைனோசர்கள் போல் தோற்றமளிக்கும் அரியவகை உயிரினம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் இந்த அரியவகை உயிரினம் டைனோசர் வகையை சேர்ந்த அரியவகை உயிரினமா? என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.