ஒரேநாளில் டிரெண்டான சிறுவன்! தற்போது போலீசுடன் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டம் ஆடிவிட்டு சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் நாட்டின் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கூட மணாலியில் சுற்றுலா பயணிகள் குவிந்த புகைப்படம் வெளியாகி அதிரவைத்தது.
மேலும் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதாகவும் தெரிகிறது.
சமீபத்தில், தர்மசாலா பகுதியில் சிறுவன் ஒருவன் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரிடமும் மாஸ்க் அணிய கூறும் காட்சிகள் வைரலாக பரவியது.
பாக்ஸு நாக் பகுதியில் மாஸ்க் அணியாமல் வரும் அனைவரிடமும் மாஸ்க் அணிய சொல்கிறார் அந்த இளம் கொரோனா தடுப்பு வீரர்.
Doesn't the people walking through does have sense? You are the people who are a sin to society.
— True nationalist?? (@True_natlist) July 6, 2021
A small kid should ask you to wear mask? Don't they have social responsibility? https://t.co/GPjjhxRY39
ஆனால் பலரும் அந்த சிறுவனின் வேண்டுகோளை காதில் கூட வாங்கிச் செல்லாமல் கடந்து சென்றனர்.
வீடியோ வெளியான சில மணிநேரங்களில் வைரலாக, யார் அந்த சிறுவன்? என போலீசார் தேடி அலைந்தனர்.
அவன் பெயர் அமித் என்பதும், பெற்றோருடன் சேர்ந்து பலூன் விற்பதும் தெரியவந்தது.
அமித் கூறுகையில், அனைவரையும் மாஸ்க் அணியும் படி போலீசார் தொடர்ந்து போலீசார் கூறிவருகின்றனர், அதனால் தான் நானும் மாஸ்க் அணியச்சொன்னேன் என வெகுளித்தனமாக கூறியுள்ளார்.
அமித்துக்கு தொப்பி ஒன்றை பரிசாக அளித்த போலீசார், நொறுக்குதீனிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பானங்களை வாங்கிக்கொடுத்துள்ளனர்.
மேலும் பலரும் சிறுவனுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ள நிலையில், இந்த சின்ன வயதிலேயே சிறுவனின் சமூகசேவையை பலரும் பாராட்ட மறக்கவில்லை!!!