ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்து வைக்க சிறுவன் செய்த காரியம்! ட்ரெண்டான காட்சி
ஒரு ஆட்டுக்குட்டி தனது தாயைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தாயை பிரிந்து தவித்த குட்டி
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் ரீல்களில் ‘goodnews_movement’ என்ற பக்கத்தால் பகிரப்பட்டது. “ஆட்டுக்குட்டியை அதன் தாயிடம் சேர்ப்பதற்கு இந்த குழந்தை எவ்வளவு முயற்சி எடுக்கிறது. ஆனால் நாமோ பிறருக்கு உதவ பலமுறை யோசிக்கிறோம்.." என்று பதிவில் எழுதப்பட்டுள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ இதுவரை 2.7 மில்லியன் வியூஸ்களையும் 191k லைக்குகளையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். பல வகையான கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

சேர்த்து வைத்த சிறுவன்
தொலைந்து போன சிறிய ஆட்டுக்குட்டியுடன் வயலில் சூப்பர் மரியோ போல் உடையணிந்த சிறுவன் இருப்பதை ரீல் வீடியோவில் காண முடிகின்றது. தன் தாயை பிரிந்துவிட்ட ஆட்டுக்குட்டி அதை தேடி பல இடங்களில் அலைகிறது.
தாய் ஆட்டை கண்ட சிறுவன். ஆட்டுக்குட்டியை அதன் தாயை நோக்கி செல்ல திசை காட்டுகிறான். அதற்கு புரிவது போல, அதனுடன் பேசி அதன் தாய் இருக்கும் திசையை சுட்டிக்காட்டி அதை அந்த திசையில் போகச்சொல்கிறான். ஆட்டுக்குட்டி தன் தாயுடன் சேரும்வரை அதனுடனேயே இருக்கிறான்.