இந்தியாவில் கிடைத்த புதையல்! உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
இந்தியாவில் இதுவரை லித்தியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த சூழலில், தற்போது வரை லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்தே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
லித்தியம் கண்டுபிடிப்பு
இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் கனிமங்கள், தாது பொருட்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மத்திய அமைச்சகம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆம் ஜம்மு காஷ்மீரின் ரைசி என்னும் மாவட்டத்தில் சலால் - ஹைமனா பகுதியில் லித்தியம் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அங்கே சுரங்கம் தோண்டப்பட்டு வந்த நிலையில், லித்தியம் இருப்பது தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே ஒட்டுமொத்தமாக சுமார் 5.9 மில்லியன் அளவிலான லித்தியம் இருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, அதிகம் லித்தியம் உள்ள நாடாகவும் இந்தியா உருவெடுக்கும் என்று கூறப்படுகின்றது.
அதாவது எலெக்ட்ரிக் வாகனம் தயாரிப்பில் லித்தியத்தின் பங்கு மிக முக்கியமாகவும். மிக இலகுவான உலோகமான லித்தியம், தண்ணீருடன் எரியக்கூடடியை எதிர்வினையை உருவாக்கும் தண்மை கொண்டது.
மண்பாண்டங்கள், கண்ணாடி, மருந்து கலவைகள், அலுமினியம் உள்ளிட்ட பலவற்றின் உற்பத்தியில் லித்தியம் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தயாரிக்க இது முக்கிய தேவையாக இருக்கின்றது.
தற்போது இந்தியாவில் முதல் முறையில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிகம் பேசு பொருளாக மட்டும் மாறியது இல்லாமல், பல உலக நாடுகளையும் இந்தியா பக்கம் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.