மிக குறைவான மலிவு விலையில் அசத்தும் மின்சார ஸ்கூட்டர்கள் லிஸ்ட் இதோ...
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாற தொடங்கிவிட்டார்கள். பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மின்சார ஸ்கூட்டர்களின் (Electric Scooters) இயங்கும் செலவு (running cost) மிகவும் குறைவாகும்.
ஆனால், பொதுவாக மின்சார ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் அவற்றை வாங்க தயங்குகிறார்கள். அந்த வகையில், மிகவும் குறைவான விலையில், மின்சார ஸ்கூட்டர்கள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
Hero Electric Flash
Hero Electric Flash-ன் இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.46640 ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.59640 ஆக உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்த ஸ்கூட்டரில் 250W மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
Hero Electric Dash
இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.62,000 ஆக உள்ளது. இந்த மின்சார வாகனம் மூன்று வகைகளில் வருகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 60 கிமீ தூரம் பயணிக்கும். இதில் 250V மோட்டார் உள்ளது. இது லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Ampere Magnus
இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.49,999 ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.76,800 வரை செல்கிறது. இது 84 கிமீ சவாரி வரம்பை (Riding Range) வழங்குகிறது.
இந்த மின்சார ஸ்கூட்டரின் எடை 82 கிலோ ஆகும். இதில் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் 50 கி.மீ ஆகும்.
Bounce Infinity E1
இந்த ஸ்கூட்டரின் மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார ஸ்கூட்டர் இதுவாகும். பவுன்ஸ் இன்ஃபினிட்டிய்யின் இதன் ஆரம்ப விலையும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.
இதன் ரைடிங் ரெஞ் 85 கிமீ ஆகும். இதில் 1500W மோட்டார் உள்ளது. Bounce Infinity E1 இன் அதிகபட்ச வேகம் 65kmph ஆகும்.