உங்க உண்மையான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதிசயங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. பறவை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கண்களுக்கு முதலில் பறவை தெரிந்தால், நீங்கள் எதையும் எளிதில் உணர்ந்து கொள்ளக் கூடியவர்கள். சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். மாற்றத்திற்கு சற்றும் அஞ்சமாட்டீர்கள். ஆனால் எதிலும் சுதந்திரத்தை தேடும் நபராக இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை எப்போதும் தேடிக் கொண்டிருக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களின் குணம் உங்களை சுற்றியிருப்பவர்களை ஊக்குவிக்கும். உங்களிடம் இருக்க அனைவரும் விரும்புவார்கள்.
2. மான்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் முதலில் மான் தெரிந்தால் சென்சிடிவ்வான நபராக இருப்பார்கள். மற்றவர்கள் மீது அதிக இரக்கம் காட்டுவீர்கள். அதிக அக்கறை காட்டும் நபராக இருந்து, மற்றவர்களின் போராட்டங்களில் ஈடுபட்டு துணையாக இருப்பீர்கள். மற்றவர்களுடன் எளிதில் இணையும் நபராக இருப்பீர்கள். வலுவான உள்ளுணர்வுடன், பொறுமைசாலி என்பதால் மிகவும் சவாலான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள்.
3. ஒட்டகச்சிவிங்கி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிந்தால், நகைச்சுவையான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலைகளில் இருந்தாலும், எளிதில் மீண்டு வரும் திறனைக் கொண்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பதால், வாழ்க்கையில் சந்திக்கும் பல சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |