உங்களோட எந்த மூளை அதிகமாக வேலை செய்கிறது என தெரிஞ்சிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. சிங்கத்தின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் சிங்கத்தின் முகம் தெரிந்தால் உங்களின் வலது மூளையை விட இடது மூளை அதிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
- நீங்கள் நடைமுறை வாழ்க்கையை புரிந்து நடந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.
- எந்தவொரு விடயத்தையும் விவரமாக கூர்ந்து கவனிப்பதோடு, பகுப்பாய்வு செய்யும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
- ஒரு விஷயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர், அந்த விடயம் பற்றி ஆழமாக சிந்திக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, எதையும் நேரடியாகவும் தெளிவாகவும் பேசும் நபராக இருப்பீர்கள்.
- உங்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதால் திறம்பட திட்டமிட்டு வேலைகளை செய்வீர்கள்.
- சிறப்பான பண்புகள் அனைத்தும் பணியிடத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க உதவியாக இருக்கும்.
2. பட்டுப்போன மரம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது வயதான பட்டுப்போன மரம் இருப்பது போன்று தெரிந்தால் உங்கள் இடது பக்க மூளையை விட வலது பக்க மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
- நீங்கள் படைப்பாற்றல் மிக்க நபராக இருப்பதால் எழுத்து, இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- திறமையை சிறப்பாக காட்டும் உங்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
- உள்ளுணர்வின் படி முடிவெடுக்கும் நபராகவும் இருப்பீர்கள்.
- உணர்ச்சி ரீதியாக உணர்திறன் மிக்கவராக இருப்பது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக காட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
