கம்பீரமாக தலை சாய்ந்த மாவீரர் பிபின் ராவத் பற்றி பலரும் அறியாத உண்மைகள்
india
UYSM
general bipin rawat
By Nivetha
மறைந்த இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.
தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் பிபின் ராவத் விபத்தில் சிக்கி பலியானார்.
முப்படைகளின் தளபதியாக தலைநிமிர்ந்த சிங்கம், தன் ராணுவ தந்திரங்கள் பயின்ற மண்ணிலேயே கம்பீரமாக தலை சாய்ந்தது பெரும் வரலாற்று பதிவாகி உள்ளது.
இவரின் சாதனை பயணம் மிக நீண்டது.

- 1958ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி பிறந்த இராணுவத் தளபதி பிபின் ராவத்தான் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி.
- இவர் 2016 டிசம்பரில் முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- ஜெனரல் ராவத் தனது இராணுவ பணியின் போது பிரிகேட் கமாண்டர், தெற்கு கமாண்டர், ராணுவ நடவடிக்கை இயக்குனரகத்தில் ஜெனரல் ஸ்டாஃப் அதிகாரி கிரேடு 2 உட்பட பல்வேறு பதவிகளை வகித்தார்.
- அவரது 38 ஆண்டுகால பணியின் போது, அவர் UYSM, AVSM, YSM, SM, VSM, COAS ஆகியவற்றுடன் அவரது வீரம் மற்றும் தகுதியான சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
- அவர் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் உறுப்பினராகவும் இருந்தார், ஐ.நா.வுடன் இருந்த காலத்தில் இரண்டு முறை படைத் தளபதியின் பாராட்டைப் பெற்றார்.
- டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியால் அவருக்கு மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது. மியான்மரில் 2015 ஆம் ஆண்டு எல்லை தாண்டிய நடவடிக்கை அவரது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
- அங்கு இந்திய இராணுவம் NSCN-K கிளர்ச்சியாளர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது.
- 2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் திட்டமிடலில் ஜெனரல் ராவத்தும் ஈடுபட்டார்.
- தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவம் குறித்து ஜெனரல் ராவத் பல கட்டுரைகளை எழுதியுள்ளார், அவை பல்வேறு வெளியீடுகளில் வெளிவந்துள்ளன.
- ராணுவத்தில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்ததற்காக ராவத்துக்கு பதக்கங்கள், பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பிபின் ராவத், இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக முப்படைகளின் தலைமை பதவியில் நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
- இராணுவ தளபதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராவத், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- அப்போதுதான் முதன் முதலில் இந்தியாவில் அந்த பதவி உருவாக்கப்பட்டது.
- அதற்கு முன்பு, இந்திய ராணுவத்தில் ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி என முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் இருந்தனர்.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருந்து வந்தார் பிபின் ராவத்.



13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US