பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? சில முக்கியத் தகவல்கள்
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக வருமான வரி துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வழங்கப்பட்டுள்ளது.
இந்த பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அதே நேரத்தில் பலர் அதில் கவனம் செலுத்தவில்லை,, இதையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமானவரி துறையினர் நீட்டித்துக்கொண்டே சென்றனர்.
மார்ச் 31-ந்தேதிக்குள் (இன்றுடன்) பான்-ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அது போன்று இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன?
அதாவது, நாளை முதல்(ஏப்.1, 2022) அடுத்த மூன்று மாதங்களுக்கு பான் கார்டு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.
மூன்று மாதங்களுக்கு பின்னர், பான் ஆதார் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச்.31 2023க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள வண்ணமயமான பறவைகள்.... ஆச்சரியப்படுத்தும் திறமை!
யாரெல்லாம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும்?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA கீழ், ஜூலை 1, 2017 அன்று PAN ஒதுக்கப்பட்ட அனைத்து நபர்களும், ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடையவர்களும் அல்லது ஆதார் எண்ணைப் பெற்றவர்களும், தங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?
வருமான வரித்துறை இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in/home-க்குள் முதலில் நுழைய வேண்டும்.
பின்னர் இடது பக்கத்தில் இருக்கும் ‘லிங் ஆதார்’ லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு புதிதாக ஒரு பக்கம் வரும்.
அதில் உள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும். 2-வது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.
3-வது கட்டத்தில் ஆதாரில் உங்களது பெயர் எப்படி உள்ளதோ அதனை அப்படியே பதிவிட வேண்டும்.
இதன் பின்னர் அதில் இடம்பெற்றுள்ள கேப்சா கோடை நிரப்ப வேண்டும், பார்வையற்றவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன் டைம் பாஸ்வேர்டு ஓ.டி.பி. வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைன் பாஸ்வேர்டு வசதியை பயன்படுத்தலாம்.
இதனை நிரப்பிவிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார், பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.
அவள் என் மகளான கதை! உருக்கமான பேட்டி