அதிர்ஷ்டம் கிடைக்க வீட்டிற்கு வெளியே எந்த திசையில் விளக்கேற்றனும்?
பொதுவாக வீட்டில் அதிர்ஷ்டம் எப்பொழுதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இந்த பதிவில் எந்தெந்த திசையில் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எந்தெந்த திசையில் விளக்கேற்ற வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் முன் தெற்கு திசையில் ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. இந்த திசை எமனின் திசையாக கருதப்படுகின்றது.
வாஸ்துபடி, வீட்டின் முன் விளக்கேற்றினால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் வருவதுடன், அது அசுபமாகவும் கருதப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிற்கு வெளியே கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசையில் தான் எப்பொழுதும் விளக்கேற்ற வேண்டும்.
வீட்டின் பிரதான நுழைவாயிலில் விளக்கேற்ற விரும்பினால் வலது பக்கத்தில் தான் வைக்க வேண்டுமாம். இது மங்களகரமானதாக கருதப்படுவதால், நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகின்றது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டிற்கு வெளியே சரியான திசையில் விளக்கேற்றினால் நேர்மறை ஆற்றல் வரும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிரம்புமாம்.
வாஸ்து படி, வீட்டிற்கு வெளியே விளக்கேற்றினால் ஆரோக்கியம் நன்றாக இருப்பதுடன், மனதிற்கு அமைதி கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
வீட்டிற்கு வெளியே எப்போதுமே எள் அல்லது கடுகு எண்ணெய்யில் தான் விளக்கேற்ற வேண்டும். இவை லட்சுமி தேவியை பிரியப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |