சிறிய சத்தம் கேட்டாலும் தூக்கத்திலிருந்து விழிப்பவரா நீங்கள்? இந்த நோய் தாக்கலாம் ஜாக்கிரதை
மனிதர்களாகிய நமக்கு தூக்கம் என்பது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நபர் சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால் பல பிரச்சினையை சந்திக்க நேரிடுகின்றது.
ஆம் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் அவசியமாக இருக்கின்றது. அவ்வாறு தூக்கம் சரியாக இல்லையெனில் இதயத்திற்கு பிரச்சினை ஏற்படுவதுடன், ஆருாக்கியத்திற்கும் உலை வைக்கின்றது.
இங்கு சின்ன சின்ன சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து எழும் நபர்களுக்கு எவ்வாறான பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
தூக்கம் கெடுவதால் ஏற்படும் பிரச்சினை
தூக்க பிரச்சினையை சந்திப்பவர்களுக்கு நீரிழிவு பிரச்சினை ஏற்படுகின்றது. ஆம் 7 மணிநேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பை அதிகரிப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருக்கின்றது.
மேலும் ஹார்மோன் உற்பத்தில் அதிகரிப்பதால், பசி அதிகமாகி அதிகப்படியான உடல் எடையை ஏற்படுத்தும்.
இதய நோய் பிரச்சினையை ஏற்படுத்தும்.
ரத்த அழுத்தத்தினை அதிகப்படுத்தும். இந்த ரத்த அழுத்தமானது எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுத்தி உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும்.
நல்ல தூக்கத்திற்கு என்ன செய்யலாம்?
தூங்குவதற்கு முன்பு ரிவி, செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும்.
அமைதியான இடத்தில் தூங்கவும். பகல் தூக்கத்தையும் தவிர்க்கவும்.
வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், கட்டாயம் 7 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.