படுத்த 10 நிமிடத்திலேயே தூக்கம் வர வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்
இரவில் சரியாக தூக்கம் இல்லாததற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்க்கை முறையில் செய்யும் சில மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்க முறைகளே.
தூக்கம் என்பது நாம் நினைத்த நேரத்தில் தூங்கிவிட்டு, நினைத்த நேரத்தில் எழும்புவது கூடாது. தூங்குவதற்கு என்று சரியான நேரத்தினை வைத்துக்கொண்டு அந்த நேரத்திலேயே படுக்க ஆரம்பித்து விட வேண்டும்.
ஆனால் இந்த சம்பவம் ஓரிரு நாட்களில் பழக்கத்திற்கு வந்துவிடும். காலையில் எழும்பும் நேரமும் எந்தவொரு அலாரமும் வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே விழிப்பு வந்துவிடும்.
மூளை, செரடோனின் (Serotonin), மெலடோனின் (Melatonin) ஆகிய ஹார்மோன்களின் அளவைச் சரிசெய்து, இயல்பான உறக்கத்துக்கு உத்தரவாதம் தந்துவிடும்.
நவீன இணைய யுகத்தில், தூக்கமின்மை (Insomnia) என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை என்பது குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்று கூட சொல்லலாம்.
இரவு முழுவதும் விழித்திருந்து, பகல் முழுதவதும் தூங்கும் பழக்கம் உள்ளது. இதனால், உடலின் ஒட்டுமொத்த செயல்பாடு, வேலை செயல்திறன் மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இந்த சிக்கலில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன.
தூக்கம் நன்றாக வருவதற்கு மெக்னீசியம் சத்து உதவுகிறது. ஏனெனில் மெக்னீசியம் சத்து மனஅழுத்தத்தை போக்க பெரிதும் உதவுகிறது. இதனால் நன்றாக தூக்கம் வரும். பாதாம், பூசணி விதைகள், கீரை, வேர்க்கடலை போன்ற உணவுகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
உடற்பயிற்சியும் தூக்கமின்மையை போக்க உதவும், ஏனென்றால், உடல் பயிற்சியில், உடல் களைத்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
நறுமணம் என்பதே நம் மணதிற்கு இதமானது. குறிப்பாக லாவெண்டர் எண்ணெயின் நறுமணம் மன அழுத்தத்தை போக்கி, தூக்கத்தை வரவழைக்கும் திறன் கொண்டது.
தூக்க பிரச்சனை உள்ளவர்கள் லாவண்டர் மணம் கொண்ட ரூம் ஸ்பேரேயை பயன்படுத்தலாம். அல்லது லாவண்டர் எண்ணையை வாங்கி வைத்துக் கொண்டு அதை நுகர்ந்து பார்க்கலாம்.
யோகாவும் (Yoga) தூக்கமின்மையை விரட்ட சிறந்த ஆயுதம் ஆகும். இதனால் நன்றாக தூக்கம் வரும் என்பதோடு, உங்கள் நினைவாற்றல், செயல்திறன் ஆகியவை மேம்படும். இதன் மூலம் உங்கள் உடலை நன்றாக கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
இரவில் தூக்கம் எப்போது வந்தாலும், அப்போது உடனே தூங்கிவிடுங்கள். அதைவிட்டு நேரத்தை குறித்துக் கொண்டு தூங்கினால், அதுவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இரவு தூங்கும் முன் சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் ஒரு குளியல் போடுங்கள். இதனால் மனம் அமைதியடைந்து, உடலுக்கு மசாஜ் செய்தது போல் இருக்கும். இதன் மூலம் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.