முடி கருகருவென வளர வைக்கும் கறிவேப்பிலை துவையல்
தலைமுடி உதிர்வு பிரச்சினையா? கவலை வேண்டாம்? உதிர்ந்த இடத்தில் முடி வளர வைக்கவும், கருகருவென முடி வளர சுவையான கறிவேப்பிலை துவையலை எப்படி செய்வது என்று பார்ப்போம் -
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 10
காய்ந்த மிளகாய் - 5
புளி - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
பின்னர், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு காய்ந்த மிளகாயை போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலே உள்ள அனைத்தையும் நன்கு ஆற வைத்து புளி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின், ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, அரைத்து வைத்த விழுதை அதில் சேர்த்து இறக்க வேண்டும்.
இந்த துவையலை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் உதிர்ந்த முடி கருகருவென வளர ஆரம்பித்து விடும்.