கொரோனா காலத்தில் கடவுளாக மாறிய துப்புறவு தொழிலாளர்கள்! தற்போதைய கண்ணீர் கதை என்ன?
நாம் வாழும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொண்டாலே பல வியாதிகளிலிருந்து தப்பிப்பதோடு, ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்பது மனிதர்களாகிய நம் அனைவருக்கும் தெரிந்த விடயமே.
துப்புரவு பணியாளர்கள்
ஒவ்வொரு ஊர்களிலும் கார்பரேஷன் மூலம் துப்புறவு தொழிலாளர்கள் தூய்மை செய்து வருவதுடன் குப்பைகளை வண்டிகள் மூலமாக சேகரித்து செல்கின்றனர்.
இவ்வாறான துப்புறவு தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் மக்கள் மரியாதையாகவும், கடவுளுக்கு நிகராக இவர்களுக்கு பாதங்களை கழுவிவிட்டு மரியாதை செய்வதையும் காணொளியில் அவதானித்திருந்தோம்.
ஆனால் தற்போது இவர்களின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தூய்மை பணியாளர்களின் கண்ணீர் கதை
தற்போது மக்கள் இவர்களை மரியாதை இல்லாமல் அழைப்பது மட்டுமின்றி தனது வீட்டு குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துக்கூட கொடுப்பதில்லை.
அவ்வாறு இவர்கள் கூறினாலும் மரியாதை இல்லாமல் பேசுவதுடன், தீண்டத்தகாதவர்களை நடத்துவதைப் போன்று நடத்துகின்றனர். நாட்டின் உள்ள மக்களை நோயிலிருந்து பாதுகாக்க எந்தவொரு அருவருப்பு இல்லாமல் குப்பைகளை சேகரித்து சுத்தமாக வைக்கும் இவர்களின் கண்ணீர் கதை என்பதை கீழே காணொளியில் தெளிவாக காணலாம்.