மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல்

Disease Rain
By Vinoja Nov 02, 2026 09:42 AM GMT
Report

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

மழைக்காலத்தில் இதுபோன்று நீர் தேங்குவதால் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் அதிகரிக்கிறது. குறிப்பாக, தேங்கிய மழைநீரில் நடப்பதால் டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன், எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல் | Leptospirosis Rat Fever Be Careful In Rainy Season

இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதுடன், போதிய சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.

மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல் | Leptospirosis Rat Fever Be Careful In Rainy Season

உங்கள் வயிற்று ஆரோக்கியத்தைப் பாதிக்கும் 3 காலை உணவுகள்! என்ன சாப்பிடலாம்?

உங்கள் வயிற்று ஆரோக்கியத்தைப் பாதிக்கும் 3 காலை உணவுகள்! என்ன சாப்பிடலாம்?

எனவே, இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம். லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, எப்படிப் பரவுகிறது, இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன?

லெப்டோஸ்பைரோசிஸ் என்பது பொதுவாக எலி காய்ச்சல் என்று அழைக்கப்படும் ஒரு வகையான பாக்டீரியா தொற்று நோயாகும். எலி, நாய், பன்றி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீரில் காணப்படும் லெப்டோஸ்பைரா என்ற பாக்டீரியா மூலம் இந்த நோய் பரவுகிறது.

குறிப்பாக, மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீர் மற்றும் சேற்றில் இந்த பாக்டீரியாக்கள் கலந்திருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.  அத்தகைய நீரில் ஒருவர் நடக்கும்போது, கால்களில் இருக்கும் காயங்கள் அல்லது சிறிய கீறல்கள் வழியாக பாக்டீரியா உடலுக்குள் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தும். 

மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல் | Leptospirosis Rat Fever Be Careful In Rainy Season

மேலும், கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாகவும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், நோய் தீவிரமடைந்து உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடும்.

எலி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்

காய்ச்சல்

கடுமையான தலைவலி

தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

வாந்தி மற்றும் குமட்டல்

குளிர் நடுக்கம்

வயிற்றுப்போக்கு

கண்கள் சிவந்து காணப்படுதல் அல்லது எரிச்சல் ஏற்படுதல்

மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல் | Leptospirosis Rat Fever Be Careful In Rainy Season

அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

எலி காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண காய்ச்சல், டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் போன்றவற்றுடன் ஒத்திருக்கலாம். இதனால் பலரும் ஆரம்பத்தில் இதைச் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

சிலர் மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், காய்ச்சலுக்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.

குறிப்பாக, மழைநீர் அல்லது வெள்ளநீரில் நடந்து சென்ற பிறகு காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது.

உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.

மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல் | Leptospirosis Rat Fever Be Careful In Rainy Season

எலி காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் எலி காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

வெள்ளநீர் மற்றும் சேறும் சகதியுமான பகுதிகளில் நடப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் வெள்ளநீரில் நடக்க வேண்டியிருந்தால், கால்களை முழுமையாகப் பாதுகாக்கும் காலணிகளை அணிய வேண்டும்.

கால்களில் காயங்கள் அல்லது சிறிய வெட்டுகள் இருந்தால், அவற்றில் அசுத்தமான நீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாசுபட்ட நீருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வீட்டிற்கு வந்ததும் சுத்தமான நீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி உடலை நன்றாகக் சுத்தம் செய்ய வேண்டும்.

மழைநீரில் நடப்பவர்களே உஷார்! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி காய்ச்சல் | Leptospirosis Rat Fever Be Careful In Rainy Season

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது!

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள் - இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வரவே வராது!

ஈரமான அல்லது அசுத்தமான ஆடைகளை மாற்றிவிட்டு, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டியது! லெப்டோஸ்பைரோசிஸ் நோய்க்கு முறையான சிகிச்சை உள்ளது.

ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் அது தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, மழைக்காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியப்படுத்ததமல் மருத்துவ சிகிச் பெற வேண்டியது இன்றியமையாதது. 

குறிப்பாக, தேங்கிய மழைநீரில் நடந்து சென்றிருந்தால் மருத்துவரிடம் அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம்  பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கலாம். 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US