பனியில் குழந்தைகள் போல விளையாடும் சிறுத்தை குட்டிகள்! அரிய காட்சி
உச்சத்தில் இருக்கும் குளிர்காலத்தில் இரண்டு சிறுத்தை குட்டிகள் குழந்தைகள் போல விளையாடுகின்றன. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல வீடி யோக்கள் வைரலாகி வரும். அதில் ஒரு சில வீடியோக்களை பார்க்கும் போது அது பல வழிகளில் நம்மை உணர்ச்சியடைய செய்யும்.
சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்கும் வீடியோக்களாக இருப்பது மிருகங்களின் வீடியோக்கள் தான். அப்படி ஒரு வீடியொ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
இரண்டு சிறுத்தைகள் பனிப்பொழிவால் மிகவும் மகிழ்ச்சியடைந்து, துள்ளி குதித்து விளையாடுகின்றன. 28 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் இரண்டு சிறுத்தைகளும் முதலில் பனியில் சறுக்கிக் கொண்டே விளையாடுவதை பார்க்க முடிகிறது.
பின்னர் வழுக்கும் பனியிலேயே இரண்டு சிறுத்தைகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்தும், லாவகமாக பாய்ந்து குதித்தும், கீழே விழுந்து புரண்டும் விளையாடி மகிழ்ச்சியடைவதை பார்க்கலாம்.
A fleeting dance of wild joy - Snow leopards somewhere in Zanskar valley in Ladakh
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 6, 2025
🎥 tashizkr pic.twitter.com/gkZ8pmDbZM
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |