அனக்கோண்டா பாம்புடன் ஓய்வெடுக்கும் நபர்... மிரளவிடும் காணொளி
பிரம்மாண்டமாக வளர்ந்த அனக்கோண்டா பாம்புக்கு தனது படுக்கையில் இடம் கொடுத்து அசால்ட்டாக புத்தகம் வாசிக்கும் நபரொருவரின் வியக்க வைக்கும் செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்காவில் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினமான அறியப்படுகின்றது.
இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே அதிகமான காணப்ப்படுகின்றது. இது மனிதர்கள் உட்பட பெரிய விலங்குகளையும் வேட்டையாடக்கூடியது.
தமிழில் ஆனைக்கொன்றான் என்னும் பெயரின் அடிப்படையில் இப்பாம்பிற்கு அனக்கோண்டா என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுககின்றது.
பார்ப்பதற்கே அச்சுறுத்துவதது போல் தோற்றம் கொண்ட அனக்கோண்டாவின் பெயரை கேட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு இனம் புரியாத பயம் ஏற்படும்.
ஆனால் துளியும் பயம் இன்றி அனக்கோண்டா பாம்புடன் சேர்ந்து அசால்ட்டாக புத்தகம் வாசிக்கும் நபரொருவரின் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |