மனிதர்களின் அலட்சியம்: பிளாஸ்டிக் போத்தலில் சிக்கித்தவித்த சிறுத்தை
மனிதர்களின் பொறுப்பற்ற, அலட்சியமான செயல்களால், வன விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும் அவல சம்பவங்கள் அவ்வப்போது வெளிவந்து நம்மை வேதனையின் ஆழ்த்துகின்றன.
மகாராஷ்டிராவின் தானேயில் ஒரு சிறுத்தை குட்டியின் தலை பிளாஸ்டிக் தண்ணீர் கொள்கலன் ஒன்றில் சிக்கி கொண்டதை அடுத்து, சுமார் 48 மணி நேரம், அந்த சிறுத்தை மிகுந்த வேதனையை அடைந்து தவித்து வந்த நிலையில், சிறுத்தையை கண்ட ஒரு நபர், அதனை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, வனத்துறையின் கவனத்திற்கும் மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.
இதையடுத்து வன அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவராலும் தேடப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு சரியாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ, குடிக்கவோ முடியாமல் சோர்ந்து போன நிலையில் இருந்த சிறுத்தை குட்டியை மீட்டுள்ளனர்.
வழிப்போக்கர் பகிர்ந்த வீடியோவில், தலையை கொள்கலனில் இருந்து விடுவிக்க சிறுத்தை தீவிரமாக போராடுவதையும், வேதனையில் அங்கு இங்கும் செல்வதையும் காணமுடிகின்றது.
குறித்த காணொளியினை அவதானித்து மீட்பு குழுவினர் வருவதற்குள் சிறுத்தைக் குட்டி காட்டுக்குள் சென்றுவிட்டது. பின்பு இடைவிடாமல் தேடி கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளனர்.
Irresponsible behaviour of tourist and people venturing into forest to party is posing a grave threat to the wild animals. A Leopard with its head stuck inside a plastic jar was spotted near Badlapur in Thane district. @MahaForest has begun the search operation. @AUThackeray pic.twitter.com/2O0CIYcSYT
— Ranjeet Jadhav (@ranjeetnature) February 15, 2022