நாள்பட்ட தொண்டை வலியால் அவஸ்தையா? அப்போ எலுமிச்சை சாறில் இதை கலந்து குடிங்க- உடனடி தீர்வு
பொதுவாக பருவக்காலங்கள் மாறும் போது சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இதனை மருந்து மாத்திரைகளால் சரி செய்வதை விட வீட்டிலுள்ள கை மருந்துகளால் சரிச் செய்ய முயற்சிக்கலாம்.
அந்த வகையில் சிலர் நாள்பட்ட தொண்டை வலியால் அவஸ்தைப்படுவார்கள். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் லெமன் ஜுஸில் தேன் கலந்து குடிக்கலாம்.
இது எவ்வளவு கடுமையாக இருந்தாலும் நொடிப்பொழுதில் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.
சளி பிரச்சினைகளை விரட்டியடிக்கும் லெமன் ஜீஸ் எப்படி தயாரிப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 200 மிலி அளவு
- இஞ்சி - சிறிய துண்டு
- தேன் - ஒரு ஸ்பூன்
- லெமன் ஜூஸ் - சில துளிகள்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
அதனுடன் சுத்தம் செய்த இஞ்சி துண்டுகளை சேர்த்து கொள்ளலாம்.
கொதித்து இறக்கிய பின்னர் ஒரு கப்பில் ஊற்றி ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக லெமன் ஒரு சில துளிகள் கலந்து குடிக்கலாம்.
இந்த டீ குடிப்பதால் நாள்பட்ட சளி பிரச்சினை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |