கொலஸ்ரால் மட்டும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் பாகற்காய் டீ எப்படி செய்வது?
கசப்பான சுவை இருந்தபோதிலும், உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாகற்காய் டீ
பாகற்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இது கசப்பான சுவை இருந்தபோதிலும், உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது.
அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
பாகற்காயின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும்.மிதமான சூட்டில் 10 நிமிடம் தண்ணீரை கொதிக்க விடவும், இதனால் பாகற்காயின் எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கியிருக்கும்.
பிறகு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்து சிறிது நேரம் அப்படியே விடவேண்டும். - பின்னர், உங்கள் விருப்பப்படி, டீ பாட் அல்லது டீ கப்களில் ஊற்றவும். - பாகற்காய் சாறு தண்ணீரில் நன்கு சேர்ந்த பிறகு, டீ-யை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்ற வேண்டும்.
பாகற்காய் டீயில் உள்ள கசப்பு சுவையை போக்கிட சிறிது நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த டீ-யை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை குடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திட முடியும் . தொடர்ந்து ஒரு மாத காலம் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |