பாகற்காய் ஜுஸை பார்த்தால் தலைதெறிக்க ஓடுறீங்களா? இனிமேல் இந்த தவறை செய்யாதீங்க
கசப்பிற்கு பெயர் போன பாகற்காய் ஜுஸ் அருந்துவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.
ஆம் பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும், இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
பாகற்காய் ஜூஸின் நன்மைகள்
பாகற்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.
பாகற்காய் செரிமான மண்டலத்தினை மேம்படுத்தி, செரிமான நொதிகளை உற்பத்தி செய்ய உதவி செய்கின்றது. மேலும் இது மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அஜீரணம், செரிமான பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுவதுடன், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்கு நோய்களுக்கு எதிராக போராடவும் உதவுகின்றது.
கல்லீரலை பாதுகாக்கவும், சுத்தம் செய்யவும் அதன் நச்சுத்தன்மையை நீக்கவும், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைக்கும் பாகற்காய் தீர்வு கொடுக்கின்றது.
மூட்டுவலி மற்றும் வீக்கத்தை குறைக்கின்றது. கீல் வாதம் போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்கவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், முகப்பரு, தடிப்பு மற்றும் வறண்ட தோல் போன்ற பிரச்சனைக்கும் சிகிச்சையளிக்கின்றது.
புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்க உதவுவதுடன், புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |