ஆபத்தை ஏற்படுத்தும் எலுமிச்சை ஜுஸ்... யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா?
கோடை காலம் என்றாலே அனைவரும் பிடித்த பானமாக மாறிவிடுவது எலுமிச்சை நீர். எடையைக் குறைப்பதிலும், செரிமான பிரச்சினையை சரி செய்வதிலும், உடம்பினை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் இதில் சில தீங்குகளும் ஏற்படுகின்றது.
வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எடையை குறைக்க கண்மூடித்தனமாக எலுமிச்சம்பழ சாற்றை பருகினாலோ சில பக்கவிளைவுகளும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
எலுமிச்சை நீரை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதுடன், பெப்டி அல்சர் உள்ளவர்கள் இதனை பருகினால் பெரும் ஆபத்து ஏற்படும்.
சிறுநீரின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இந்த செயல்பாட்டில், பல எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் சிறுநீர் வழியாக வெளியேறுவதால், நீரிழப்பு ஏற்படுவதுடன், பொட்டாசியம் குறைபாட்டையும் ஏற்படுத்துகின்றது.
வைட்டமின் சி ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிப்படுத்துவதால், உள் உறுப்புகளை சேதப்படுத்தும். சிறுநீரக கற்கள் அபாயத்தையும் அதிகரிக்கின்றது.
அதிக அமிலத்தன்மை கொண்டதால், எலும்புகள் பலவீனமடைந்து, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்களுக்கு டான்சில் பிரச்சனை இருந்தால், எலுமிச்சைப் பழத்தை உட்கொள்ள வேண்டாம். தொண்டை வலிக்கு காரணமாகிவிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.