தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடித்தால் ஆபத்தா?
health
food
lemon
Benefits of lemon
By Nivetha
எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பது உடலுக்கு அதிசயங்களை செய்யலாம்.
எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எலுமிச்சையில் கிடைக்கும் நன்மைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
- எலுமிச்சம் பழத்திற்கு வாந்தி, குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
- எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும்.
- விரலில் நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சம் பழத்தை துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைத்தால் வலி குறையும்.
- எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் தீரும்.
- மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் ஏற்படுவது குறையும்.
- எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும்.
- உயர்தர பொட்டாசியம், எலுமிச்சைச் சாற்றில் உள்ளதால் இதய நோயாளிகளின் இதயத்தை பலமாக்குகிறது.
- வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றை கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.
- எலுமிச்சை, ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
- காலையில் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
- எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.
- கபம் அதிகம் இருந்தால் 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.
- வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருந்தால் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும்.
- மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.
எலுமிச்சை சாற்றை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்
- ஒரு டம்ளர் எலுமிச்சை நீர் குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
- இதில் இருக்கும் இயற்கையான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட செய்கின்றன.
- குறிப்பாக வைரஸ் காய்ச்சல் மற்றும் கோடைகாலத்தில் ஜலதோஷம் வருவதை தடுக்க முடியும்.
- வெறும் வயிற்றில் எலுமிச்சை சேர்க்க வேண்டாம். அதற்கு மாற்றாக தினசரி உணவில் சத்தான பானமாக இதையும் சேருங்கள்.
- இது நார்ச்சத்து கொண்டது என்பதால் வயிற்றை திருப்திகரமாக வைத்திருக்கும். மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இது ஆரோக்கியமான எடை இழப்பு பயணத்துக்கு சரியானது.
- முடி வியர்வை, வெப்பம், தூசி போன்றவை ஒவ்வொரு கோடைக்காலத்திலும் தலைமுடியை சேதப்படுத்தும்.
- இவை மயிர்க்கால்களில் அடைத்து முடியை எண்ணெய் சுரப்பை அதிகரிக்கிறது. எலுமிச்சை பானம் சுரப்பிகளில் இருந்து எண்ணெய் உற்பத்தி மற்றும் சுரப்பு குறைக்கிறது.
- முடி உதிர்வதை தடுக்கும் மயிர்க்கால்களை இறுக்குகிறது.
ஒரே வாரத்தில் தொப்பை காணாம போக வேண்டுமா? வெறும் வயிற்றில் இந்த டீயை குடிங்க!
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US