பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத் காலமானார்: இரங்கல் தெரிவித்து வரும் திரை பிரபலங்கள்!
பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இவரின் இறப்புச் செய்தியைக் கேட்டு பல திரைபிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கே.விஸ்வநாத்
1965ஆம் ஆண்டில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கௌரவம் படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை வென்றார்.
இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என 50க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். மேலும், தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய சங்கராபரணம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பல விருதுகளை வாங்கிக் குவித்தது.
மரணம்
இந்நிலையில் கே.விஸ்வநாத் உடல்நலக்குறைவால் தனது 92 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் வயது மூப்புக்காரணமாக சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் தான் நேற்று இரவு தனது வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார். இவரின் இறப்பு திரையுலகினரைச் சேர்ந்த பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவர்களின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இவரின் உடல் ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் கடிதம்
இவரின் இறப்புச்செய்தியை அறிந்ததும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், மாஸ்டருக்கு சல்யூட் என்ற பதிவுடன் இரங்கல் கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், “கலாதபஸ்வி கே. விஸ்வநாத் அவர்கள் வாழ்வின் திருவுருவத்தையும், கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர். அதனால் அவருடைய கலை அவரது வாழ்க்கை மற்றும் கோலோச்சிய காலங்களுக்கு பின்னரும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை” என பதிவிட்டுள்ளார்.
Salute to a master . pic.twitter.com/zs0ElDYVUM
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2023