ரஜினிக்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை மரணம்: சோகத்தில் திரையுலகம்
பழம்பெரும் நடிகையாக வலம்வந்த நடிகை வசந்தா உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை வசந்தா
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வந்த வசந்தா, எம்.கே. தியாகராஜ பாகவரது நாடகக்குழுவில் இடம்பெற்றவர் ஆவார்.
நாடகத்தில் இருந்து பின்பு சினிமாவில் நுழைந்த இவர், கமல்ஹாசனின் மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் என்ற படத்தில், அவருக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மதியம் 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். இன்று மதியம் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகை வி. வசந்தாவின் மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.